Friday, June 26, 2015

TNPC பொதுத்தமிழ்


                                     பொதுத்தமிழ் பாடத்திட்டம் பகுதி அ

பொருத்துதல்(பொருத்தமானப்பொருள்களினை தேர்ந்து எடுத்தல்,புகழ்ப்பெற்ற நூல்லாசிரியர்கல் -தொடரும் தொடர்பும் அறிதல்-தொடரால் குறிக்கப்பெறு சான்றொர்கள்,அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றொர்கள்-பிரித்தெழுதுக-எதிர்ச்சொல்கண்டறிதல்-பொருந்தாச்சொல்லைக்கண்டறிதல்-பிழை நீக்கம்(சந்திப்பிழை நீக்குதல்,மரபு பிழை நீக்குதல்,பிறமொழிச்சொற்க்களை நீக்குதல்,வழுவுச்சொற்க்களை நீக்குதல்,வழுவுச்சொற்க்களை நீக்குதல்-ஆங்க்கிலச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறிதல்-ஒலி வேறுபாடு அறிந்து சரியானப்பொருள் அறிதல்-ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருள்களினை தேர்ந்து எடுத்தல்-வேர்சொல்லைதேர்ந்து எடுத்து எழுதுதல்,வேர்சொல்லை வைத்து வினைமுற்று,வினையெச்சம்,வினையாலனையும் பெயர்,தொழிற்ப்பெயர் கண்டறிதல்-அகரவரிசைப்படி சொற்க்களை சீர்ரமைத்தல்-சொற்க்களினை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்,பெயர்ச்சொல்லின் வகையறிதல்-இலக்கணக்குறிப்பறிதல்(இலக்கணகுறிப்பு ?,பெயரெச்சம்,வினையெச்சம்,முற்றெச்சம் அறிதல்,வினைத்தொகை,பண்புத்தொகை கண்டறிதல்,வினைமுற்று,வினையாலனையும் பெயர் கண்டறிதல்-உருவகம்,உவமைதொகை கண்டறிதல்,இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர்,ஒருபொருட்பன்மொழி,எண்னும்மை,உம்மைத்தொகை,கண்டறிதல்,அன்மொழித்தொகை,உரிச்சொற்தொடர்,உயிரெளப்படை,ஒற்றளப்படை அறிதல்-வேற்றுமைத்தொகை கண்ட்றிதல்-விடைக்கேற்ற வினாவினை தேர்ந்து எடுத்தல்-எவ்வகை வாக்கியம் எனக்கண்டறிதல்-தன்வினை,பிறவினை,செய்வினை,செய்யப்பாட்டுவினை,வாக்கியங்க்களினைம் கண்டறிதல்,உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப்பொருள்களினை தேர்ந்து எடுத்தல்-எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்து எடுத்தல் பகுதி ஆ திருக்குறள் தொடர்பான மேற்க்கொள்கள்,செய்திகள் தொடரை, நிரப்புதல்(அன்பு,பண்பு,கல்வி,கேள்வி,அடக்கம்,ஒழுக்கம்,பொறை,நட்பு,வாய்மை,கல்வி,வலி,ஒப்புரவறிதல்-செய்னன்றி,சான்றாமை,பெரியாரைதுனைக்கெடல் பொருள்செயல்வகை,வினைதிட்ப்பம்,இனியவைக்கூரல்-பதினேன்கீழ்க்கணக்கு நூல்கல்ப்பற்றிய செய்திகள்-கம்பராமாயனம்-பதினேன் மேல்க்கனக்கு நூல்கல்(பத்துப்பாட்டு,எட்டுதொகை நூல்கள்)-ஐம்பெருங்க்காப்பியங்க்கள்-ஐஞ்ச்சிருக்காப்பியங்க்கள் குறித்த செய்திகல்-நாட்டுப்புரப்பாட்டு சித்தர்ப்பாட்டு தொடர்பான் செய்திகள்

 பொருத்தமானசொல்லைதேர்ந்து எடுத்தல் 

மாருதம்-காற்று, செரு-போர், செறு-வயல் ,வளி-காற்று ,மஞ்சை-மயில் ,வேய்-மூங்க்கில் த்வ்வை-மூதேவி புரை-குற்றம் தீயுழி-நரகம் தாளான்மை-முயற்சி களிறு-ஆண்யானை பிடி-பென்யானை அசவாமை-தளராமை உகிர்-நகம் ஏதம்-துன்பம் கூலம்-தானியம் புரவி-குதிரை மல்லல்-வளப்பம் உம்பர்-தேவர் குருசு-சிலுவை மருக்-மயக்கம் தொழும்பர்-தொண்டர் நறை-தேன் அண்டர்-தேவர் தொடை-மாலை அஞ்சுமின்-கூற்றம் களி-மகிழ்ச்சி அறிமின்-அறனேறி வட்டு-சூதாட்டக்கருவி பொருமின்-கடுங்க்சொல் மறு-குற்றம் தகவு-நன்னடத்தை பூதலம்-உலகம் முண்டகம்-தாமரை பிடி-நிலம் கமுக்கு-பாக்கு பொருப்பு -மாலை மத்தமான்-யானை கால்-காற்று உழை-மீன் வாவி-குளம் காளர்-காடு தீம்-இனிமை கொண்டல்-மேகம் பிணிமுகம்-மயில் தார்-மாலை தரு-மரம் புள்-பறவை விழுமம்-சிறப்பு வரை-மாலை மரை-மான் விசும்பு-வானம் நல்குரவு-வறுமை சலம்-வஞ்சனை கஞ்சம்-தாமரை ஏறு-ஆண்சிங்க்கம் பிணவு-பெண்சிங்க்கம் பல்லவம்-தளிர் பொலம்-அழகு நாவாய்-படகு கொண்டல்-மேகம் பள்ளி-படுக்கை மேதினி-உலகம் மாறன்-மன்மதன் என்பு-எழும்பு மறம்-வீரம் ஆர்வலர் அன்புடையீர் பூசல் தரும்-வெளிப்பட்டு நிற்க்கும் வையம்-உலகம் வழக்கு-வாழ்க்கைனெறி என்பிலது-புழு எலும்பு இல்லாத்தது வன்பால்-பாலைனிலம் வன்மை-கொடைத்தன்மை மடவர்-பெண்கள் தகைசால்-பண்பில் சிறந்த புனல்-நீர் தழைக்கவும்-குறைக்கவும்,கூடுதல் கடம்-உடம்பு வெய்யவினை துன்பம்தரும் சொல் புகலல் ஒண்னாதே-செல்லாதே அவல்-பள்லம் மிசை-மேடு படிரு-வஞ்சம் அளைஇ-கலந்து அமர்-விருப்பம் முகன்-முகம் துவ்வாமை-வறுமை அல்லவை-பாவம் பண்-இசை புரை-குற்றம் சுடும்-வருத்தும் எய்யாமை-வருந்தமை அகம்-உள்ளம் தானை-படை பதுமை-உருவம் சேமம்-நலம் முட்டு-குவியல் கடுகி-விரைந்து கனகம்-பொன் கசடு-குற்றம் கதி-துனை பேறு-செல்வம் நனி-மிகுதி
நூல்கல் மற்றும் நூல் ஆசிரியர்கல்
 நூல்கள் நூலாசிரியர்கள் சிலப்பதிகாரம்- இளங்க்கோவடிகள்
மணிமேகளை- சீத்தலைச்சாத்தனார்
சீவக சிந்தாமனி- திருத்தக்க தேவர்
திருக்குறள் வள்ளுவர் பெரியப்புறாணம் சேக்கிழார் திருவாசகம் மாணிக்கவாசகர் ஏலாதி கணித மேதவியார் சீறாப்புறானம் உமறுப்புலவர் மணோன்மனியம்,தொகைனூல் விளக்கம் சுந்தரனார்அல்லதுசுந்தரம்பிள்ளை குயில்பாட்டு,கண்ணன்பாட்டு,பாஞ்சாலிசபதம் ஞானரதம்,அக்னிக்குஞ்சு,,பூலோகரம்பை,புதிய ஆத்திச்சூடி,சீட்டுக்கவி,சந்திரிகையின் கதை பாரதியார் கலிங்கத்துப்பரணி செயங்க்கொண்டார் இருண்டவீடு,பாண்டியன் பரிசு,குடும்பவிளக்கு,பிசிராந்தையார்(சாகித்திய அகடமிக் விருது),தமிழாச்சியின் கத்தி.அழகின் சிரிப்பு,சேரத்தாண்டவம்,கண்ணகிப்புரட்சிக்காப்பியம்,குறிங்கித்திட்டு,தமிழியக்கம்,எதிர்பாராத முத்தம்,இளைஞர் இழக்கியம்,பிசிராந்தையார்,நல்ல திர்ப்பு ‘பாவேந்தர்’பாரதிதாசன் கணகசுப்புரத்தினம் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்,நீதினெறிவிளக்கம்,மீனாட்ச்சியமை பிள்ளைத்தமிழ்,கந்தர்கலிவெண்பா,மதுரைகலம்பகம் குமரகுருபரர் பெத்தலகெமேகுறவஞ்சி,ஞரன உலா,ஞனதச்சன்,ஆரணத்திந்தம் வேதனாயக சாத்திரியார் பூங்க்கோடி(தமிழக அர்சு விருது,காவியப்பாவை,வீரகாவியம் முடியரசன் யேசுக்காவியம்,அர்த்த்முள்ள இந்து மதம்,ஆட்டனத்தி ஆதிமந்தி, சிவகங்க்கை சிமை,மாங்க்கனி,சேரமான் காதலி கவியரசு கண்னதாசன் கிராமத்து நதி(சாகித்திய அகடமி விருது,சிரித்த்முத்துகள் நிலாப்பூ)சூரிய நிழல்,சர்ப்பயாகம்,ஒளிப்பறவை,ஆதிரை சிற்ப்பி பாலசுப்பிரமனியம் சுரியகாந்தி,கறுப்பு மலர்கள்(சகித்திய அகடமி விருது)தாஜ்மகாலும் ரொட்டிதுண்டும்சகாரவைத்தாண்டாத ஒட்டகங்க்கள் நா.காமராசன் தேவாரம், திருநாவுக்கரசர்,அப்பர்,சுந்தரர் திருப்பாவை ஆண்டாள் இரட்சணிய யாத்திரிகம் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை(ஹென்றி ஆல்பிரடு) தமிழரசி குறவஞ்சி அ.வரதநஞ்சையப்பபிள்ளை தேம்பாவணி,துன்னுல் விளக்கம்,திருக்காவலுர் கலம்பகம்,சதுரகராதி,கலிவெண்பா விரமாமுனிவர் இராசராச சோழனுழா ஒட்டகூத்தர் சுவரும் சுண்ணாம்பும், சுராதாவின் கவிதை தொகுப்பு.தேன்மழை(தமிழக அரசு விருது),துறைமுகம்,தாயின் முத்தம் உவமைக்கவிங்கர் ராசகோபாலன்(சுப்புரத்தினதாசன்(சுரதா)) திருவாசகம்,திருக்கோவையார்,திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் கலித்தொகை நல்லந்துவனார் திருமுருகாற்றுப்படை .நெடுனெல்வாடை நக்கிரர் சிறுபஞ்சமூலம் காரியாசன் திருக்கழுக்குன்றப்புரானம் மற்றும் மாலை,சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்,திருவாரூர் உலா,சந்திரவாணன் கோவை அந்தக்கவி வீர்ராகவர் திருவிளையாடல்புராணம் பரஞ்சோதி முணிவர் கனிசாறு,ஐயை,கொய்யாக்கனி,பாவியக்கோத்து,பள்ளிப்பறவைகள்,பாவியக்கொத்து,நுறசிரியம் பாவலரேறு பெருன்சித்திரனார் சிறுதுளி பெருவெள்லம் மீரா(மீ.ராசேந்திரன்) காந்திப்புராணம்,திலகர்ப்புராணம்,குழந்தைசுவாமிகள் பதிக்கம்,ஆத்திச்சுடி வெண்பா இக்கால ஒளவையார்’அசலாம்பிகை அம்மையார் திருமந்திரம் திருமூலர் இனியவை நாற்ப்பது பூதங்க்சேந்தானார் திருவள்ளுவ மாலை கபிலர் நளவென்பா புகலேந்திப்புலவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,பென்னின் பெருமை,முருகன் அல்லது அழகு,தமிழ்த்தென்றல்,உரிமை வேட்க்கை தமிழ்தென்றல்’திரு.வி.கல்யானசுந்தரம் மூதுமொழிக்காஞ்சி கூடலூர்க்கிழார் திரிகடுகம் நல்லாதனார் கல்லோக்காவியமோ,அகல்விளக்கு,கரித்துண்டு,மண்குடிசை,பெற்றமனம் மூ.வரதராசனார் நை நடம்,வெற்றி வேட்க்கை அதிவிர ராமப்பாண்டியன் ஆசிய சோதி,உமர்கயாம் பாடல்கல் தேசிய வினாயகம் பிள்ளை மலைவாசல்,கடல்புறா,கன்னிமாடம்,யவன ராணி சாண்டில்யான் வில்லி பாரதம்,சொக்கனாதர் உலா வில்லி புத்துரார் சடகொப்பர் அந்தாதி,சரஸ்வதி அந்தாதிசிலை எழுபது,ஏர் எழுபது கம்பர் திருப்புகழ் அருணகிரினாதர் கந்தப்புராணம் கச்சியப்பர் தமிழில் முதல் தோன்றியவை நூல் தலைப்பு ஆசிரியர் மூதல் நிகண்டு திவாகர நிகண்டு திவாகர முனிவர் முதல் நாவல் பிரதாபமுதலியார் சரித்திரம் வேதனாயகம் பிள்ளை முதல் சிறுகதை மங்கையர்க்கரசியின் காதல் தமிழ் தாத்தா உ.வே.சா முதல் அந்தாதி அற்ப்புத திருவந்தாதி - முதல் கோவை பாண்டிக்கோவை முதல் மாலை திருவரட்டை மணிமாலை முதல் பிள்ளைத்தமிழ் குலோத்துங்க்கன் பிள்ளைத்தமிழ் ஒட்ட்டக்கூத்தர் முதல் குறவஞ்சி திருக்குற்றாலகுறவஞ்சி வள்ளலார் முதல் பரணி கலிங்கத்துப்பரணி செயங்க்கொண்டார் முதல் விருத்தப்பா நூல் சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர் முதல் இந்திலக்கண நூல வீரச்சோழியம் புத்தமித்திரர் முதல் மூன்றிலக்கன நூல் தொல்காப்பியம் தொல்காப்பியர் முதல் பள்ளு மூக்குடற்ப்பள்ளு முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம் முதல் தூது நூல நெஞ்சுவிடுதூது முதல் உலா நூல் திருக்கை ஞான உலா புலவர் பெயர் சிறப்பு பெயர் புலவர் பெயர் சிறப்பு பெயர் கம்பர் கல்வியில் பெரியவன் கம்பன் கபிலர் குறிஞ்சிக்கொரு கபிலர் செயங்க்கொண்டார் பரணிக்கோர் செயங்க்கொண்டார் நச்சினார்க்கினியர் உச்சிமேற்ப்புலவர் சீத்தலைச்சாத்தனார் புலனழுக்கற்ற அந்தனாலன்,கூலவனிகன்,தண்டமிழ்புலவன் ஆண்டாள்,வைணவம் தந்த செல்வி சூடிக்கொடுத்த சூடர்க்கொடி சேக்கிழார் உத்தமசோழபல்லவராயர்,தொண்டர்சீர்பரவுவர் ஜீ.யூ.போப் தமிழ் மாணவன் இராமலிங்க்க சுவாமிகள் வள்ளலார்,அடிகளார் திரு.வி.க தமிழ்தென்றல்,தமிழ் உரைனடையின் தந்தை பாரதியார் கற்ப்பூரசொற்க்கோ,பைதமிழ் தேர்ப்பாகன் ஞானசம்பந்தர் ஆளுடையப்பிள்ளை,காழிவள்ளல்,திராவிடசிசு, திருநாவுக்கரசர் ஆளுடையரசு,மருள்நீக்கியார்,அப்பர்,நாவுக்கரசர் சுந்தரமூர்த்தி நாயனார் தம்பிரான் தோழர்,வண்தொண்டர்,நாவலூரார் மாணிக்கவாசகர் தென்னவன் பிரம்மராயன்,மணிவாசகர் உ.வெ.சாமிநாத ஐயர் தமிழ்தாத்தா மீனாட்ச்சி சுந்தரம் பில்ளை நவீனகம்பர் புதுமைப்பித்தன் சிறுகதை மன்னன்,தமிழ் நாட்டின் மாப்ஸன் பம்மல் சம்பந்த மூதலியார் தமிழ் நாடக தந்தை பரிதிமாற்க் கலைஞர் தமிழ் நாடக பேராசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடக தலைமை ஆசிரியர்,நாடக் உலகின் இமயமலை தென்னகத்தின் பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா(ஓர் இரவு நாடகத்திற்க்கா கல்கி அவர்கள் இப்படி பாராட்டினார்கள் மு.வரதராசனார் தமிழகத்தின் பெர்னாட்ஷா கந்தசாமி தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை வாணிதாசன் கவிஞ்ரேறு,தமிழகத்தின் வேர்ட்ஸ்வெர்த், பாவலர் மணி எச்.ஏ கிருட்டிணப்பிள்ளை கிறுத்துவக்கம்பர் வெ.ராமலிங்க்கனார் நாமக்கல் கவிஞர்,காந்தியக்கவிஞர் மா.பொ. சிவஞனாம் சிலம்புச் செல்வர் அந்தக்கவி வீரராகவ முதலியாஅர் தேசியவிநாயகம் பிள்ளை கவிமணி அழ.வள்ளியப்பா குழந்தைக்கவிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை சொல்லின் செல்வர் பன்மொழிப்புலவர் கா.அப்பதுரை அண்னாமலை ரேட்டியார் சிந்துக்கு தந்தை சிங்காரவேலனார் மே தினம் கண்டவர் கல்வி.இரா.கிருஷ்ணமூர்த்தி சிறுகதையின் தந்தை தாயுமானவர் அழகியமணவழதாசர் புதுக்கவிதயின் தந்தை பாரதி அப்துல் ரகுமான் கவிக்கோ கண்ணதாசன் கவியரசு நப்பியாண்டார் நம்பி தமிழ் வியாசர் நூல் பெயர் சிறப்பு பெயர் நூல்பெயர் சிறப்பு பெயர் சிலப்பதிகாரம்,மணிமேகலை இயற்க்கை இன்ப வாழ்வு நிலையங்க்கள்,இரட்டைக்காப்பியங்க்கல், சீவகசிந்தாமணி இயற்க்கை தவம் பட்டுப்பாட்டு இயற்க்கை ஒவியம் கலித்தொகை இயற்க்கை இன்பக்கலம் திருக்குறள் இயற்க்கை வாழ்வில்லம் கம்பராமாயனம் இயற்க்கை பரினாமம் பெரியப்புராணம் இயற்க்கை அண்பு தேவாரம்,திருவாசகம்,திருவாய்மொழி இயற்க்கை இறையருள் திருமந்திரம் தமிழ் மூவாயிரம்,தமிழர் வேதம், திருவாய்மொழி-நம்மாள்வார் திராவிட வேதம்தமிழ்மறை அகானானுறு நெடுந்தொகை வேளன் வேதம் நாலடியார் இலக்கண நூல் விளக்கம் குட்டிதொல்காப்பியம் பழமொழி நானுறு முதுமொழி,உலகவசனம்,மூதுரை பெரியப்புராணம் திருத்தொண்டர்ப்புராணம்,வழினூல்,அறுபத்துபுராணம் முக்குடற்ப்பள்ளு உழத்திப்பாட்டு மலைப்படுக்டாம் கூத்தராற்றுப்படை மணிமெகலை குண்டலகேசி பெளத்த காப்பியங்க்கள் வளையாபதி,சீவகசிந்தாமணி சமணகாப்பியங்க்கள் பட்டினப்பாளை வஞ்சி நெரும்பாட்டு குறுந்தொகை நல்லக்குறுந்தொகை அழகின்சிரிப்பு குழந்தை இழக்கியம் திருக்கை ஞானஉலா குட்டி திருவாசகம் ஏலாதி குட்டி திருக்குறள் தாயுமானவர்ப்பாடல்கல் தமிழ்மொழியின் உப நிடதம் ஐம்பெருங்க்காப்பியங்க்கள் சிலப்பதிகாரம் சிலம்பு+அதிகாரம் சிலாம்பால் உறுவாண வரலாறு ஆசிரியர் சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்க்கோவடிகள்.தலைவன் கோவலன்,தலைவி கண்னகி 30 காதைகளினை உடையது(புகார்க்காண்டம் 10 வஞ்சிக்காண்டம்=7மதுரைக்காண்டம்-13)கதையின் உருவம் இசை நாடகம் “உரையிடையிட்ட பாடுடைய செய்யுள்’ பாரதியார் இளங்கோவடிகளினைப்பாற்றிய்ம்,சிலப்பதிகாரத்தினைப்பற்றியும் பின்வருமாறு போற்றுகின்றார் யாம் அறிந்தப்புலவர்களில் கம்பனைப்போல்,வள்ளுவர்போல்,இளங்க்கோவவினைப்போல் பூமிதனில் யங்க்கேனும் பிறந்ததில்லை,உண்மை வெறும் புகழ்ச்சியில்லை நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று மணியாரம் படைத்ததமிழ் நாடு மணிமேகலை மணிமேகலை - கோவலன் மாதவி தம்பதியின் மகள், உதயகுமரன் - சோழ மன்னன், மனிமேகலையின் மீது முட்டாள் தனமான மோகம் கொண்டவன். இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். சீவகசிந்தாமணி . சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும் , மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றி, சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது. வளையாபதி தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் நாதகுத்தனார். இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. குண்டலகேசி தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன. தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர்குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும். • இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு. ஐஞ்சிறுக்காப்பியங்கள் நீலக்கேசி நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இப் பகுதிகளின் பெயர்களையும் அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம். 1. கடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள் 2. தரும உரை - 140 பாடல்கள் 3. குண்டலகேசி வாதம் - 82 பாடல்கள் 4. அர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள் 5. மொக்கல வாதம் - 193 பாடல்கள் 6. புத்த வாதம் - 192 பாடல்கள் 7. ஆசீவக வாதம் - 71 பாடல்கள் 8. சாங்கிய வாதம் - 53 பாடல்கள் 9. வைசேடிக வாதம் - 41 பாடல்கள் 10. வேத வாதம் - 30 பாடல்கள் 11. பூத வாதம் - 41 பாடல்கள் யசோதராக்காவியம் தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப் பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது. மேற்சொன்ன சமணக் கொள்கையை விளக்கி எழுந்ததே யசோதர காவியம் ஆகும். உதய நாட்டு மன்னன் மாரிதத்தனின் ஆணைக்கு இணங்க உயிர்ப்பலி தருவதற்காக இழுத்து வரப்பட்ட இளம் சமணத் துறவிகள் இருவர் முன்கதை கூறும் பாங்கில் அமைந்தது இந் நூல். அரிசி மாவினால் செய்த கோழி ஒன்றைக் காளிக்குப் பலி கொடுத்த யசோதரன் என்னும் மன்னனும் அவனது தாயும் அதனால் ஏற்பட்ட கர்ம வினையினால் எடுத்த பிறவிகள் பற்றியும், அவர்கள் அடைந்த துன்பங்கள் பற்றியும், இறுதியில் அவர்கள் அபயருசி, அபயமதி என்பவர்களாக மனிதப் பிறவி எடுத்து மனிதப்பலிக்காகக்கொண்டுவரப்பட்ட நிலை குறித்தும் கூறுவதே இந்நூலின் கதையாகும். நாககுமாரக்காப்பியம் நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது. 170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சமண சமய நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு முத்தி பெறுவதற்குத் துறவின் இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக் கதையின் நோக்கமாகத் தெரிகிறது. உதயணக்குமாரக்காவியம் உதயணகுமார காவியம் தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.[1] இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்தபெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல். • இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு. உதயணன் என்பவனின் கதையை இது கூறுகிறது. கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான். உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது சமண சமயத்தைச்சார்ந்த ஒரு நூல். பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார். சூளாமனி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியைஒட்டியுள்ளது. சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர். இவர் சமண சமயத்தவர். காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன். இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்துவந்துள்லான். மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கணநூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையானநூல் இதுவே. தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின. தொல்காப்பிய ஆறு பண்டை உரையாசிரியர்கள்[தொகு] 1. இளம்பூரணர் 2. பேராசிரியர் 3. சேனாவரையர் 4. நச்சினார்க்கினியர் 5. தெய்வச்சிலையார் 6. கல்லாடனார் பதினென் மேல்க்கணக்கு நூல்கள் 1.எட்டுத்தொகை நூல்கள் 2.பத்துப்பாட்டு நூல்கள் எட்டுத்தொகை 1.நற்றினை தினை;அகத்தினை ஆசிரியர்=பெயர் தெரியவில்லை தொகுத்தவர்=தெரியவில்லை,தொகுப்பித்தவர்=பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி பாடல்களின் என்னிக்கை=400. எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. . குறுந்தொகை ஆசிரியர்- தினை=அகத்தினை தொகுத்தவர்=பூரிக்கொ தொகுப்பித்தவர்=206 பேர் குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஐங்குறுநூறு ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். தினை புலவர் குறிஞ்சி 100 கபிலர் முல்லை100 பேயனார் மருதம்100 ஓரம்போகியார் நெய்தல்100 அம்முவனார் பாலை100 ஒதலாந்தையார் எட்டுத்தொகை நூல்களில் தொல்காப்பியம் கூறும் வரிசைப்படி குறிஞ்சித் திணையை முதலில் வைக்காமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய பாடல் இது ஒன்றே ஆகும். பதிற்றுப்பத்து புறத்தினைப்பாடல் பதிற்றுப்பத்து [1] எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள்பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் அந்த 8 பேர். பகுதி புலவர் பாடப்பட்டவர் முதல்பகுதி உதயஞ்ச்சேரலாதன் - இரண்டாம் பகுதி குமட்டூர் கண்னனார் இமயவரம்பன் நெடுங்க்சேரலாதன் மூன்றம் பகுதி பாலை கெளாதமனார் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் நான்கம் பத்து காப்பியாற்றுக் காப்பியனார் களங்க்காய்க்கனி முடிச்சேரல் ஐந்தாம் பத்து பரணர் கடல் பிறக்கொட்டிய செங்க்குட்டுவன் ஆறாம் பத்து காக்கைப்பாடினியார்(நச் செல்லையார்) ஆடுக்கோட்ப்பாட்டு சேரலாதன் ஏலாம் பத்து கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதன் எட்டாம் பத்து அரசில் கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஒன்பதாம் பத்து பெருங்குன்றூர்க் கிழார் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை பத்தாம் பத்து சசேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல்,இரும்பொறை பொருந்தில் இரங்க்கிரனார் “ஓங்கு”பரிப்பாடல் அகமும் புறமும் தழுவியப்பாடல் பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. • தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது. • நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல். • வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும். [3] • வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும். • கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும் • சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு • 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும் • பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் “உயர்தோர் எத்தும்” கலித்தொகை கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை,தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன, கலித்தொகை நூலில் உள்ள • பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவன் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ • குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவன் கபிலன் • மருதத்திணைப் பாடல்களைப் பாடியவன் மருதன் இளநாகன் • முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவன் சோழன் நல்லுருத்திரன் • நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவன் நல்லந்துவன் இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை. அகனானூறு அல்லது நெடுந்தொகை அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோஅல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர் இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை தலைவன்-முருகன், புலவர்-நக்கிரன் பாவகை=ஆசிரியர்ப்பா முருகனின் ஆறுபடை வீடுகலை கொண்டு இன்னூல் விளக்குகின்றது பொருனராற்றுப்படை தலைவன்-சோழன் கரிகால வளவன், ஆசிரியர்-மூடத்தாமக் கண்னியார் பாவகை=ஆசிரியப்பாவால் ஆனது சிறுபணாற்றுப்படை தலைவன்=ஒய்மன் நாட்டு மன்னன் நல்லியக்கோடான் புலவர்=நாதத்தனார் இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொருபாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது. முல்லைப்பாட்டு சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை. நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு நெடுநெல்வாடை பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச்சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத்தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில்நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும் பட்டினப்பாலை பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் .பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின்பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும். மலைப்படு கடாம் சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர். [1] நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல்,யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. குற்ஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும். இதன் இறுதியில் இரண்டுவெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்தப் பாடலின் தொகுப்புச் செய்திகளைக் கூறுகின்றன. தலைவன் தலைவி தன்னிச்சையாக உடலுறவு கொள்ளத் தோழி ஒப்புதல் தந்துள்ளாள். மதுரைக்காஞ்சி சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். பெரும்பனாற்றுப்படை 500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன்வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்என்னும் புலவர். பதினேன் கீழ்க்கனக்கு நூல்கள் நாலடியார்,நான்மனிக்கடிகை,இன்னா நாற்ப்பது,இனியவை நாற்ப்பது கார் நாற்ப்பது,களவளி நாற்ப்பது,ஐந்தினைஐம்பது,ஐந்தினை எழுவது,திணைமொழி ஐம்பது,திணைமாலை நூற்றி ஐம்பது,திருக்குறள்,திரிகடுகம்,ஏலாதி,சிறுபஞ்சமூலம்,பழமொழி நானுறு,முதுமொழிக்காஞ்சி,கைந் நிலை நாலடியார் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. நான்மனிக்கடிகை நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது[1]. ஒவ்வொரு பாடலும்நான்கு அடிகளால் ஆனது[2] இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. இன்னா நாற்ப்பது கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இதுபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற் தொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இனியவை நாற்ப்பது பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. கார்னாற்ப்பது பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல்கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால்இயற்றப்பட்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. களவளி நாற்ப்பது பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது.சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேரமன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது. ஐந்தினை ஐம்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது. இதை எழுதியவர்மாறன் பொறையனார் என்னும் புலவர். இது கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் எனக் கருதப்படுகின்றது. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் தமிழர்வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களிலும், அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின. ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பிண்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன. தினைமொழி கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்டது இந்நூல். சங்கம் மருவிய காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஐந்தினை எழுபது ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது. அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர்மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஐந்திணைகள் என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர்நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்ட மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது. திணைமாலை நூற்றைம்பது திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே. இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன. திருக்குறள் திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.[1] இதனை இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் • திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330 • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது. • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000 • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194 • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம் • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல் • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில் • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர் • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப் • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர் • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது. • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. • திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர் • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரிக்கடுகம் திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல்ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். பழமொழி நானூறு பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது சிறுபஞ்ச மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் அய்ந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி,நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து, ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி. சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பதுஎன்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. ஏலாதியில் 80 பாடல்கள் உள்ளன. இந்நூலின் பெயர்ஏலத்தை முதலாகக் கொண்ட ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது. முதுமொழிக்காஞ்சி மதுரைப் பதியைச் சேர்ந்த கூடலூர்க் கிழார் என்பவர் இயற்றியது முதுமொழிக்காஞ்சி. சங்கம் மருவியகால 18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது. ஒவ்வொன்றும் பத்து அடிகளைக் கொண்ட பத்துப் பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது. இந் நூலிலுள்ள எல்லாப் பாடல்களுமே, ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் என்றே தொடங்குகிறது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு: 1. சிறந்த பத்து 2. அறிவுப் பத்து 3. பழியாப் பத்து 4. துவ்வாப் பத்து 5. அல்ல பத்து 6. இல்லைப் பத்து 7. பொய்ப் பத்து 8. எளிய பத்து 9. நல்கூர்ந்த பத்து 10. தண்டாப் பத்து கைந்நிலை கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு புலவர். வாக்கிய வகையறிதல் வாக்கியங்க்களின் வகைகள் தன்வினை,பிறவினை தன்வினை எழுவாய் தானே செய்யும் செயலை உணர்த்துவது பிறவினை எழுவாய் பிறர்மூலம் செய்யும் செயலைக்குறிப்பது எ-கா;கண்ணன் படம் வரைந்தான்,அழகி அன்னம் உண்டால் மேற்க்காண்ட வாக்கியங்க்களில் கண்ணன் மற்றும் அழகி என்பது எழுவாய் வரைந்தான் ,உண்டால் செயல் இவ்விரு வாக்கியங்க்களும் தன்னிலை வாக்கியங்க்கள் எழுவாய் தானே தனது செயலை செய்வது எ-கா2:ஆதம் தமிழ் மொழியினை பயிற்றுவித்தான்,மலர்விழி நடனம் ஆட்டுவித்தால்,தேன்விழி அன்னம் உண்பித்தால் மேற்க்கண்ட வாக்கியங்க்களில் ஆதம்,தேன்மொழி,மலர்விழி ஆகியவை எழுவாய் ,பய்ற்றுவித்தான்,ஆட்டுவித்தால்,உண்பித்தால் என்பது செயல்.இச்செயல்களினை எழுவாய் செய்யவில்லை,ஆதம் பயிலவில்லை பயிற்றுவித்தான்,மலர்விழி ஆடவிழ்லை ஆட்டுவித்தால்,தேன்மோழி உண்ணவில்லை உன்பித்தாள் செய்வினை,செய்யாப்பாட்டுவினை எழுவாய் செய்யும் செயல் செய்வினை வாக்கியம் எழுவாயால் செய்யப்பாட்ட செயல் செயப்பாட்டு வாக்கியம் எ-கா1;கம்பர் கம்பராமாயனத்தை எழுதினார்,தச்சர் நாற்க்காலி செய்தார், கபிலர் குற்ஞ்சித்தினை பாடினார். சரவணன் கார் ஓட்டினான் மேற்க்காண்ட வாக்கியங்க்களில் கம்பர்,தச்சர்,கபிலர்,சரவனன் ஆகியோர் எழுவாய்,எழுதினார்,செய்தார்,பாடினார்,ஓட்டினான் என்பது எழுவாய் செய்யும் செயல் எ-கா2; திருக்குறள் திருவள்ளுவரினால் இயற்றப்பாட்டது,மக்களால் உறுப்பினர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டனர் மேற்க்கண்ட வாக்கியங்க்களில் திருவள்ளுவர்,மக்கள் இருண்டும் எழுவாய் செய்தசெயல் செய்தியாக கொடுக்கப்பட்டுள்ளது செயப்பாட்டுவினை வாக்கியம் பட்டது என்று முடியும் தனிவாக்கியம்,தொடர்வாக்கியம்,கலவை வாக்கியம் தனிவாக்கியம் ஒரு எழுவாயோ ஒன்றுக்கு மேற்ப்பட்ட எழுவாயோ ஒரு பயனிலையினைக் கொண்டு முடியும். தொடர் வாக்கியம் பல தனி வாக்கியங்க்கள் தொடர்ந்து வந்து ஒன்றுக்கு மேற்ப்பட்ட எழுவாய் அல்லது பயனிலையினை கொண்டு முடியும். கலவை வாக்கியம் ஒரு முதன்மை வாக்கியம் பல துணை வாக்கியங்க்களுடன் சேர்ந்து வரும் எ-கா;1 முகமது பின் காசிம் போர்க்கலை பயின்றார், கமலக்கண்னன் மருத்துவம் பயின்றான், ஸ்டாலின்,சேகுவரா,மற்றும் பிடல்காஸ்ட்ரோ ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்கவர் மேற்க்கண்ட வாக்கியங்க்களில் முகமது பின் காசிம்,எழுவாய் கமலக்கண்னன்எழுவாய்,ஸ்டாலின்,சேகுவாரா மற்றும் பிடல்காஸ்ட்ரோ ஆகியோர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட எழுவாய் பயின்றான்,பயின்றார்,சிறப்புமிக்கவர்கள் அகியவை பயனிலைகள், எ-கா:2 ஆங்கிலேயர் வியாபாரம் செய்யவந்தனர்,சூல்ச்சி செய்தனர், நம்மை அடிமைப்படுத்தினர் திப்புசுல்த்தன் ஐதராபாத்தை ஆண்டார்,மருதுசகோதரர்கள் சிவகங்க்கையை ஆண்டார்கல் ,இவர்கள் அனைவரும் ஆங்க்கிலேயரினை எதிர்த்தனர் மேற்க்கண்ட முதல் வாக்கியத்தில் ஆங்க்கிலேயர் என்பது ஒரு எழுவாய் செய்தனர்,அடிமைப்படுத்தினர் என்பன பயனிலை இரண்டாம் வாக்கியத்தில திப்புசுல்த்தான்,மருதுசகோதரர்கள் எழுவாய் ஆண்டார்,ஆண்டார்கள்,எதிர்த்தனர் அகியவை பயனிலை இவ்வாறு ஒன்று அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட எழுவாயினைக்கொண்டு தொடர்ச்சியான வாக்கியங்க்கள் அமைந்து ஒன்று அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட பயனிலையினைக் கொண்டுமுடியும். எ-கா;3 அப்துல்கலாம் மாணவர்கலினை “2020ல் இந்தியா வல்லராசாக மாற்ற கணவு கானுங்க்கல் என்று கூறினார் மோகன் கையூட்டுப்பணம் வாங்க்கியதால் வாழ்க்கையில் துன்புற்றான்- அப்துல்கலாம் மாணவர்களிடம் மோகன் கையூட்டுப்பணம் வாங்க்கியாதால் என்பது முதன்மைவாக்கியம் 2020இந்தியா வல்லராசாக கணவு கானுங்க்கல் ,வாழ்க்கையில் துன்புற்றான் என்பது துனை வாக்கியம் செய்தி வாக்கியம் ஒரு செய்தியினை தாங்க்கி நிற்க்கும் வினாவாக்கியம் வினா எழுப்பும் வகையில் அமையும் விழைவு வாக்கியம் ஏவல்,வாழ்ட்துதல்,வைத்தல்,வேண்டல்,விதித்தல் ஆகியவற்றில் ஒன்றினை தெரிவிக்கும் உணர்ச்சி வாக்கியம் உவகை ,அச்சம்,அவலம்,,வியப்பு ராமன் கொலை செய்தான்,திருடன் கைது செய்யப்பட்டான்,கரிகாலன் கல்லனையினை கட்டினான்.(செய்திவாக்கியம்) நீ நேற்று மதுரைக்கு சென்றாயா?, அது உனக்கு தெரியுமா ?9வினா வாகியம் விழைவு வாக்கியம் நீ அங்கு செல்(ஏவல்),மன்னவா நீ வாழ்க பல்லாண்டு(வாழ்த்துதல்) நீ விளங்க்க மாட்டாய் உருப்படமாட்டாய்(வைதல்),தயவு செய்து எனக்கு கொஞ்சம் பணம் தாருங்க்கள்(வேண்டல்)(விழைவு வாக்கியங்க்கல்) ஆஹா ! என்னே குத்துப்மினார் உயரம், ஐயோ அண்னா மரனம் எய்த்துவிட்டாரெ!,படத்தில் இருப்பது நீயா(உணர்ச்சி வாக்கியங்க்கள்) வேர்சொல்லறிதல் இதற்க்கு மிக முக்கியம் பகுபத உறுப்பிலக்கணம் மற்றும் பிரித்த் எழுத்துதல் விதிகள். சொல் வேர்ச்சோல் சொல் வேர்ச்சோல் கொண்டான் கொள் சுட்டவன் சுடு அறிந்து அறி இகழ்தல் இகழ் தேடினான் தேடு விழுந்து விழு கூறிய கூறு கேட்டல் கேள் வெந்த வே செத்தது சா போகின்ற போ கற்றான் கல் ஓடினான் ஓடு தந்தான் தா சொல் கேட்டான் நின்றான் நில் கேட்டான் கேள் பட்ட படு கண்டு காண் பார்த்தான் பார் சென்றனர் செல் தந்தான் தா கேட்டான் கேள் நட்ட நடு கட்த்தல் கட அடர்ந்து அடர் உறழ்ந்து உறழ் நிகழ்ந்து நிகழ் சூல்தல் சூல் புகழ்தல் புகழ் விழ்தல் வீழ் மாள்தல் மாள் செல்லுதல் செல் நின்ற நில் தோல்வி தோல் வெற்றி வெல் தருகின்றான் தரு செல்வான் செல் நொந்தான் நோ படித்தான் படி கண்டு காண் கேட்ட கேள் பாடிய பாடு சென்றான் செல் கற்றவர் கல் நின்றவன் நில் நடக்கின்றான் நட சென்றான் செல் வருக வா கண்டான் காண் கொடுத்தாள் கொடு வந்தாள் வா கொன்றான் கொள் ஆடினான் ஆடு நடந்தாள் நட கட்த்தல் கட மறந்து மற அடர்ந்து அடர் சுடர்தல் சுட அகழ்ந்து அகழ் புரண்டு புரள் மகிழ்தல் மகிழ் ஆளுதல் ஆள் புரண்டு புரள் மகிழ்தல் மகிழ் மாள்தல் மாள் நின்ற நில் வெற்றி வெல் பெற்றான் பெறு பிடித்தான் பிடி அழித்தல் அழி அறியாய் அறி நட்டான் நடு விட்டான் விடு வேர்சொல்லில் இருந்து வினைமுற்று,வினை எச்சம்,வினைத்தொகை, உருவாக்குதல் வினைமுற்று தொலிழையும்,காலத்தினையும் உணார்த்தும்,தினைப்பால் காட்டும் விகுதியோடு சொல் முற்று பெற்றிருக்க வேண்டும். வினைமுற்று=வேர்சொல்+தொழில்+காலம்+(பால்+தினை) ர்,ன்-ஆண்பால்,உயர்தினை, ர்,ள்=பெண்பால் உயர்தினை. னது=அஃக்றினை வகைகள். தெரினிலை வினைமுற்று செய்பவன்,,கருவி,நிலம்,காலம், செய்பொருள் ஆகியவற்றை தெரிவிக்கும். குறிப்பு வினைமுற்று மறைமுகமாக காலம் காஅட்டும்,செய்பவனையும் தினையாய்யும் காட்டும்.இடம் பொருள்,காலம்,சினை,பண்பு.தொழில்,நடிகன் மதியழகன்,ஆதிரையான்,இனியன்,கரியன். உடன்பாடு,எதிர்மறை வினைமுற்று உடன்பாடு விணைமுற்று தொழில் நிகழ்வதைக்குறிக்கும் எதிர்மறை தொழில் நிகழாமையினைக்குறிக்கும். ஏவல் வினைமுற்று கட்டளைப்பொருளில் வரும்,முன்னிலை இடத்தில் வரும்,ஒருமைப்பன்மையினை காட்டும். நீ,,போடா,செய் வியங்க்கோள் விணைமுற்று வாழ்த்துதல் வைதல் வேண்டல் விதித்தல்,பொருள்களில் வரும் முன்று இடங்க்களிலும் வரும்,ஒருமை,பன்மை பகுப்பு இல்லை க,இய,ஒயர் விகுதிகல் வரும் வாழ்க,,வாழியர்,வாழிய வேர்சொல்லில் இருந்து வினையெச்சம் அறிதல் முற்று பெறாத வினைச்சோல் வினை யேச்சம் தெரினிலை வினையெச்சம் காலத்தையும்,செயலையும்,வெளிப்படையாக உணர்த்தும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் காலத்தை வெளிப்படையாக காட்டாமல் பண்பின் அடிப்படையில் பொருலை உணர்த்தும் வினையெச்சம் இன்,இ,,உ,து,ஆகியவற்றால் முடியும் வினைத்தொகை முக்காலம் பொதுவாக இருக்கும் இரண்டுப்பகுதிகளினைக் கொண்ட்து. முதல்ப்பகுதி வினையையும் இரண்டாவது பகுதி பெயர்ச்சொல்லாகவும் அமையும். வேர்சோல் வினைமுற்று வினையெச்சம் வினையால் அனையும் பெயர் உண் உண்டான்/ர்/ள்,உண்பான்/ர்/ள்,உண்ணுவான்/ர்/ள் உண்ட,உண்டு உண்டவர் நட நடந்தாள்/ர்/ன்,நடப்பான்/ள்/ர்,நடகின்றாள்,ன்,ர் நடந்த,நடந்து நடந்தவனை ஓடு ஓடினாள்/ர்/ன்,ஓடுகிறார்/ள்/ள்,ஓடுவான்/ர்/ள் ஓடி ஓடியவன் படி படித்தான்/ள்/ர்,படிப்பான்/ள்/ர்,படித்துக்கொண்டிருகின்றார்/ன்/ள் படித்து படித்தேன் விழு விழுந்தான் விழுந்த்து, விழுந்த்து விழுந்தவன் நில் நின்றாது,நிற்க்கும்,நிற்க்கப்பொகின்றது நின்ற நின்றவன் செய் செய்த்து,செய்யும்,செய்யப்பொகின்றது செய்த செய்தான் அறு அறுப்பவன்,அறுத்த்து,அறுக்கப்பொகின்றன அறுத்து அறுத்த்வன் கல் கற்றான்,கற்றரது,கற்ப்பிபாள் கற்றது கற்றவன் பிடி பிடித்தான் பிடித்த பிடித்தவன் ஆடு ஆடியது ஆடிய ஆடியவன் பொழி பொழிக பொழிந்து பொழிந்த்வை நடி நடித்தார் நடித்து நடித்தவன் கல் கற்க கற்றது கற்றவன் பாடு பாடியவன் பாடிய பாடியவன் வா வந்தவன் வந்த வந்தவர்
வினைத்தொகை நிகழ்காலம் இறந்த காலம் எதிர்க்காலம் ஊறுகாய் ஊறுகின்றக்காய் ஊறியக்காய் ஊறும்க்காய் ஆடும்கொடி ஆடுகின்றக்கொடி ஆடியக்கொடி ஆடும் கொடி உறைகிணறு உறைகின்ற கிணறு உறைந்த கிணறு உறையும் கிணறு எரிதழல் எரிகின்றதழல் எரிந்த தழல் எரியும் தழால் தொடுவானம் தொடுகின்றவானம் தொட்ட வானம் தொடும் வானம் விரிகாய் விரிகின்ற காய் விரிந்த காய் விரியும் காய் தேர்புலவர் தேடுகின்ற புலவர் தேர்ந்தப்புலவர் தேரும் புலவர் குளிர்மழை குளிர்கின்ற மழை குளிந்தமழை குளிர்விக்கும் மழை இடிகுரல் இடிக்கின்றகுரல் இடிந்த குரல் இடிக்கும் குரல் அதிர்குரல் அதிர்கின்ற குரல் அதிர்ந்தக்குரல் அதிரும் குரல் ஆழ்க்கடல் ஆழமாகின்றக்கடல் ஆழமானக்கடல் ஆழமானகடல் விரிகாய் விரிகின்றக்காய் விரிந்தகாய் விரியும்க்காய் கனிவாய் கனிகின்ற வாய் கனிந்தவாய் கனியும் வாய் பெயர்ச்சொல்லின் வகையறிதல் பெயர்ச்சொல் ஒன்றன் பெயரை உனர்த்தி,பால்,எண்,தினை கட்டி,காலம் காட்டமல் வரும்சொல் பெயர்ச்சொல் 1.பொருட்பெயர் பெருள்ளின் பெயரினைக்குறிக்கும் பெயர் பொருட்பெயர் உடல் மரம்.செடி,நற்க்காலி,பெருந்து,மேசை,கணிணி,மின்விசிறி,பந்து,எழுதுகோல்,அச்சுக்கருவி பொன்னன்.-பொருட்பெயர் உயர்தினையும் அஃகிறினையும் உணர்த்தும். 2.இடப்பெயர் இடத்தைகுறிகும் பெயர் உலகம்,செவ்வாய்கிரகம்,ஆசியா,இந்தியா,சீனா,பாக்கிஸ்தான்,மதுரை,சென்னை,கோவை,திருச்சி,தேனி. 3.சினைபெயர் சினை –உறுப்பு தட்டச்சுப்பலகை,கை,கால்,வாய்,இலை,கிழை,எழுதுமுள், 4.காலப்பெயர்] காலத்தைக்காட்டும் 5.பண்புபெயர் அல்லது குணப்பெயர் ஒரு பொருளின் பண்பினை அல்லது தன்மையினைக்குறிக்கும் சொல் பண்பு என்பது நிறம்,சுவை,வடிவம்,அளவு,பொன்றவை அடிப்படையாக கொண்டது 6.தொழிற்ப்பெயர் தொழிழைக்குறிக்கும் பெயர் தொழிற்ப்பெயர் ஆகுபெயர் ஒரு பொருலின் பெயர்,தன்னை சூட்டாமல் தன்னோடு தொடர்புடைய வேரொன்றிற்க்கு தொன்று தொட்டு பெயராகி வருவது ஆகுவெயர் பெயர் சொல் வகை பெயர்சொல் வகை மலர்,இழை,வேர்,தண்டு,பூ சினைப்பெயர்கள் மரம் பொருட்பெயர் தோல்,தோள்,பல்,நாக்கு,கை,கால்... சினைபெயர் உடல் பொருட்பெயர் செம்மை,வெண்மை,கருமை,நீலம்,மஞ்சல்,பசுமை,... நிறப்பண்புபெயர்கள்: சதுரம்,வட்டம்,செவ்வகம்முக்கோனம்,.. வடிவ பண்புபெயர் செல்லுதல்,நடத்தல்,ஓடுதல்,பாடுதல்,உண்டான்,விளையாட்டு,அழைத்தல்,இருப்பு, தொழிற்ப்பெயர்கல் ஞாலம்,பள்ளி,சென்னை,மலை,கோயில்,உலகம் இடப்பெயர்கள் நல்லன்,அன்பு,நண்று குணபெயர்கள் நீளம் குணப்பெயர் ஊதியம்,தாமரை,சிங்க்கம் பொருட்பெயர் மாலை,காலை,மாதம்,கிழமை தை,மாசி,ஆடி காலப்பெயர்கள் காலப்பொழுது,மாலைப்பொழுது காலவாகுபெயர் பழி நாணுவாஅனை வினையால் அணையும் பெயர் இனிமை,செழிமை,மாட்சி,நன்மை பண்பு பெயர் பேறுபெற்றான் முதல்னிலை திரின்த தொழிற்ப்பெயர் புத்தகம்,வீடு,புலி பொருட்பெயர் வீட்டிற்க்கு வெள்ளையடித்தான்,இன்ப்பு வழங்க்கினான் பண்பாகுபெயர் பிறவி,செய்தமை தொழிற்ப்பெயர் இரவு,விடியல்,முன்சாம்மம்,கார்காலம் காலப்பெயர் உவமையால் விலக்கப்பெரும் பொருத்தமான பொருள் உவமை பொருள் எலியும் பூனையும் பொல,பாம்பும் கீரியும் பொல பகை உள்ளங்க்கை நெல்லிக்கணிப்போல தன்கையில் உள்ள பொருல்/வாய்ப்பு நிலத்தறைந்தான் கை பிழையதாற்று கேடு நூனலும் தன் வாயால் கேடும் அறிவில்லாத செயல்,அறிவிளி,தனக்கு தானே துன்பம் தேடிக்கொள்ளல் அடியற்ற மரம் போல் விழுதல் வளர்ப்பிறை பொல வளர்த்தல்,வளர்ச்சி ஆமைப்பொல ஐந்து அடங்க்கலாற்றின் அடக்கம் தாமரை இலைத்தண்னிர் போல பட்டும் படாமலும் கூர்மையரேனும் மரம் போலாவார் பண்பிலாதவர் அகழ்வாரை தாங்க்கும் நிலம் போல பொறுத்தல்,பொறுமை கனியிருப்ப காய்கவர்தற்று கடும் மொழி பேசல் அடுத்துக்காட்டும் பளிங்க்கு பொல கண்னாடி உள்ளங்க்கை நெல்லிக்கணிப்போல பயன் தெளிவு கினறு வெட்ட பூதம் கிழம்பியது போல் எதிர்பாராத திமை மடைதிறந்த வெள்ளிம் போல விரைவு குடத்திட்ட விளக்கு போல மறைவு நகமும்,சதையும் போல ஓற்றுமை வேலியே பயிரை மேய்ந்தது போல துரோகம் இலவுகாத்த கிளிப்பொல ஏமாற்றம் பசுமரத்தாணிப்போல இளமையில் கல் மழைமுகம் காண பயிர் பொல வருந்துதல்,ஏக்கம் தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்தது போல கட்டிருள் வெளிச்சத்தால் நீங்க்கும் அன்னம்போல நடை,னல்லது கேட்டது பிரித்தரிதல் தாமரை பொன்ற முகம் மலரும் மணமும் போல கணவன் மனைவிப்பொல ஊருனை நீர் நிறைந்தாற்ப்பொல அறிவு செல்வம் நிறம்பியவர் நாய் பெற்ற தெங்க்கம் பழம் போல கருமியிடம் உள்ல பணம் பயனற்றது தோன்றி மறையும் வானவில் போல ஆச்சரியம் எதுகை,மோனை,இயைபு 
மோனை 
முதல் எழுத்து ஒன்றிவருவது 1,2-எழுத்து இணை மோனை, 1,3=பொழிப்பு மோனை 1,4=ஒரு உ 1,2,3, கூழைமோனை 1,3,4-மேற்க்கதுவாய் 1,2,3,4-முற்றுமோனை.
 எதுகை
 இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை,சீர் எதுகை 1-2 இனை எதுகை 1-3-பொழிப்பு எதுகை 1-4 ஒரு உ 1-5-கூழை 1,3,4,-மேற்க்கதுவாய்,1,2,4 கிற்க்கது வாய் 1,2,4-கிற்க்கது வாய் 1,2,3,4 முற்று எதுகை.
இயைபு 
இறுதி எழுத்து ஒன்றி வருவது
பண்புத்தொகை
 சொல்லின் முதற்ப்பகுதி பண்பு ,குணம்,உருவம்,நிறம்,எண்,சுவை,போன்ற பண்பினைக்குறிக்கும்,சொல்லின் கடைப்பகுதி பெயர்சொல்லினைக் குறிக்கும்.பெயர்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையே மைவிகுதி பெற்று வரும்.. வண்ணப்பண்புத்தொகை செந்நிறம்-செம்மை+நிறம் செங்குருதி=செம்மை+குருதி காரிருள்=கருமை+இருள் செங்கதிரேன்=செம்மை+கதிரவன் செவ்வேள்=செம்மை+வேள் செங்கண்=செம்மை+கண் செந்நெல்=செம்மை+நெல் செஞ்சடை=செம்மை+சடை செந்தாமரை=செம்மை+தாமரை செங்க்கோல்=செம்மை+கோல்
 வடிவப்பண்புத்தொகை
 வட்டத்தட்டு-வடிவம்-இத்தொடர் வட்டமான தட்டு எனப் பொருள் தருகின்றது.வட்டம் என்பது வடிவத்தைக்குறிப்பதால் இது வடிவப்பண்புத்தொகை, வட்டப்பலகை,செவ்வகசட்டம்
அளவு பண்புத்தொகை முத்தமிழ்=முன்று+தமிழ்,மூவேந்தர்=முன்று+வேந்தர்,இரட்டைக்காப்பியங்க்கள்=இரண்டுக்காப்பியங்க்கள் சுவைப்பன்புத்தொகை உவர் நீர்,கார மிளகாய்,இனிப்பும்,துவர்ப்பும் பண்புத்தொகை 
அறவினை-அறம்+வினை,அருவினை=அருமை+வினை,அருந்தமிழ்-அருமை+தமிழ், அருந்தவர்=அருமை+தவர் , ஆரமுது-அருமை+அமுது,ஆரூயிர்-அருமை+உயிர்,கொடுவிடம்-கொடுக்கும்+இடம் இருபெயரிட்டு பண்புத்தொகை 
சிறப்பு பெயர் முன்னும்,பொதுப்பெயர் பின்னும் ஆகிய என்பது இடையிலும் மறைந்து வருவது இரு பெயரிட்டு பண்புத்தொகை 1.தமிழ் மொழி=தமிழாகியமொழி,அறநெறி=அறமாகிய நெறி
உவமைத்தொகை
 உவமை சொல் முதலில் வரும் இரண்டாவதாக வரும் சொல் பொருள்ளினைக்குறிக்கும்முதல் சொல்லுக்கும் இரண்டாம் சொல்லுக்கும் இடையில் போல போன்ற சொற்க்கல் மறைந்து வரும் பவளவாய்=பவளம் போன்ற வாய்,மலரடி=மலர் போன்ற அடி உருவகம் இரண்டு சொல்லாக வரும் முதல் சொல் பொருள்ளினைக்குறிக்கும் இரண்டாவது சொல் உவமை குறிக்கும் வாய்பவளம்.
 உம்மைத் தொகை 
கொடுக்கப்பட்ட சொல் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும் இது இரண்டுக்கும் இடையில் உம் என்ற எழுத்து மறைந்து வரும் அண்ணந்தம்பி=அண்னனும்தம்பியும்
என்ணும்மை
 கொடுக்கப்பட்ட சொல் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும் இது இரண்டுக்கும் இடையில் உம் என்ற எழுத்து வெளிப்படையாக வரும்
முற்றும்மை
 கொடுக்கப்பட்ட சொல் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும் இருதியில் மட்டுமே உம் வரும்
 இரட்டைக்கிளவி
 பிரித்துப்பார்த்தால் பொருள்தராது சரசர வென்பது இரட்டைக்கிளவி,தகதக என்பதும் இரட்டைக்கிளவி பிரித்துவைத்தால் பொருள்தராது
அடுக்குத்தொடர் 
வாழ்க,வாழக என்பது அடுக்குத்தொடர் பிரித்தால் பொருள்தரும்.