Sunday, June 15, 2014

                         இந்திய விடுதலைப்போராட்டம்.
1).சிப்பாய்க்கலம் நடந்த ஆண்டு
(A).1857 (B)1855 (C).1854 (D).1856

2).சிப்பய்கலகத்தின் பொழுது இந்தியாவின் வைசிராய்
(A).கர்சன் (B). கானிங்க் பிரபு (C).இர்வின் பிரபு(D). மெளண்பேட்டன்பிரபு

3).ஆங்கில வரலாற்று ஆசிரியர்களினால் படைவீரர்களின் கிளர்ச்சி என்று அழைக்கப்பட்டும் நிகழ்வு இந்திய வரலாற்று ஆசிரியர்களினால்--------------------என அழைக்கப்படுகின்றது
(A).இந்தியர்களின் எழுச்சி (B). சிப்பாய்களின் போராட்டம் (C).இந்தியப்பிரிவினை போர் (D). முதல் இந்திய சுதந்திரப்போர்

4).சிப்பாய்க்கலகத்திற்க்கு உடனடி காரணம்
(A).புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு ரக துப்பாக்கி மற்றும் அதன்  கொழுப்பு தடகப்பட்ட தோட்டாவினைப்பற்றிய  வதந்தி
(B).ஜாலியன் வாலபாக் படுகொலை
(C).ஆங்கில மற்றும் இந்திய சிப்பாய்களிடம் காணப்பட்ட பகை மற்றும் காழ்ப்புணர்வு
(D). இவற்றில் ஏதுவுமில்லை

5).சிப்பாய் கலகத்தில் முதன் முதலில் துக்கிலடப்பட்ட சிப்பாய்
(A).மங்கள் பாண்டே (B). பூலித்தேவன் (C).ரகேஷ் ஷர்மா(D). தந்தியா தோபே

6).இந்திய சிப்பாய் கலகத்திற்க்கான அடிப்படைக்காரணகளில் தவறாண ஒன்று
(A).இந்திய சிப்பாய்களுக்கு ஆங்கில சிப்பாய்களுக்கு இணையான சம்பளமும் பதவி உயர்வும் மற்றும் சலுகைகளும் அளிக்கப்படவில்லை   1856 கானிங்க் கொண்டு வந்த பொதுபணிப் படைச் சட்டம் இந்திய சிப்பாய்கள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்காக கடல்கடந்து சென்று போரிடவேண்டும் என கூறியது.
(B). ஆங்கிலேயரின் வாரிசு இழப்பு கொள்கை மற்றும் துணைப்படைத்திட்டம் ஆகியன மூலம் பல மன்னர்கள் நாடுகளினை ஒப்படைக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர் மேலும் முகலாயர்கள் அவர்களின் முன்னோர் சொத்துகளினை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினாரினால் உபயோகப்படுத்தமுடியாமல் தடுக்கப்பட்டனர்
(C).பாரசீக மொழி மற்றும் அதிக சிக்கலினையுடைய நீதித்துறை அதிகப்படியான வரிவிதிப்பு ஆகியவை  இந்தியாவின் நெசவுத்தொழில் மற்றும் பூர்விகத்தொழில்கள் கம்பெனியின் ஆதிக்கத்தினால் நசிவடைந்தது.
(D).ஜாலியன் வாலபாக் படுகொலை

7).கிழக்கிந்திய கம்பெனியின் இராணூவத்தில் இந்திய சிப்பாய்வகித்த மிக உயர்ந்தப்பதவி
(A).சுபேதர் (B). லெப்டினட் (C).மார்ஷல்(D). கேப்டன்
(10-16 வரை) (A).கூற்றும் விளக்கமும் சரி (B). கூற்று தவறு விளக்கம் சரி (C).கூற்றும் விளக்கமும் தவறு (D).கூற்று தவறு மற்றும் விளக்கம் சரி

8).கூற்று:புதியதாக கம்பெனியின் இராணூவத்தில் சேர்ந்த ஆங்கில சிப்பாயின் சம்பளம் இரணுவத்தில் சுபேதார்ப் பதவி வகிக்கும் இந்திய சிப்பாயின் சம்பளத்தினை விட அதிகம்.
விளக்கம்:ஆங்கில சிப்பாயினை விட இந்திய சிப்பாய்கள் மிகவும் தாழ்வாகவே  நடத்தப்பட்டனர்

9)கூற்று:இராணுவப் பொதுப்பணியாளர் சட்டத்தினை கொண்டுவந்தவர் கானிங்க் பிரபு.இச்சட்டம் இந்திய இராணூவ வீரர்களினை வெகுவாக பாதித்தது
 விளக்கம்:இராணுவப் பொதுப்பணீயாளர் சட்டம் என்பது.இந்திய வீரர்கள் ஆங்கில அரசுக்காகவும் கம்பெனிக்காகவும் தேவையேற்படின் கடல்கடந்து சென்று பணீயாற்றிட வேண்டும் என அச்சட்டம் கூறியது.

10).கூற்று:போர் முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி, மற்றும் அலகாபாத் ஆகிய இடங்களில் ஆங்கிலேய இராணுவத்தில் இந்திய சிப்பாய்களே அதிகமாக இருந்தனர்.
விளக்கம்:ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் இந்தியார்களின் எண்ணிக்கை ஆங்கில சிப்ப்பாய்களினை விட 5 மடங்கு அதிகம்

11).கூற்று:இந்து சொத்து உரிமை சட்டம் கிஸ்த்துவ மததிற்க்கு மாற மக்களினை ஊக்குவிக்க ஏற்ப்படுத்தப்பட்டது. என கருத்து தோன்றியது
 விளக்கம்:இந்த சட்டம் மதம் மாறியவர்களுக்கும் மூதத்யையர் சொத்தில் பங்கு உண்டு என கூறியது.

12)கூற்று.சிப்பாய்கலத்தில் தந்தியாதோபே முதலில் நானாசாகிபுடனும் பின்னர் ஜான்சி ராணியுடனும் இனைந்து ஆங்கிலேயரினை எதிர்த்தார்
விளக்கம்:நானசாகிப் ஆங்கிலேயரினால் கொல்லப்பட்டவுடன்  தந்தியாதோபே ஜான்சிராணியுடன்  இனைந்து புரட்சியினை வழி நடத்தினார்

13).கூற்று:னானாசாகிப் லக்னோவினை விட்டு நேபாளத்திற்க்கு ஒடினார்
விளக்கம் :லக்னோவில் நானசாகிப் சர் காலின் காம்பெல் என்பவரினால் தோற்கடிக்கப்ப்ட்டார்

14).கூற்று:முகலாய அரசர் இரண்டாம் பகதூர் ஷா ரங்குனில் தனது 87வது வயதில் இறந்தார்
விளக்கம்:சிப்பாய்கள் டெல்லியினை கைப்பற்றி முகலாய அரசர் இரண்டாம் பகதுர்ஷாவினை அரசராக பிரகடனப்படுத்தினர்கள்.டெல்லியினை மீட்ட அங்கிலேயர் அங்கு ஒரு கோலைவெறிச்செயலினை அரங்க்கேறி முகலாய அரசர் இரண்டாம் பகதூர்ஷாவினை ரங்கூனிற்க்கு நாடு கடத்தினர்

15).சிப்பாய்கலகம் ஏற்பட அடிப்படையான சமய காரண/ம்/ங்கள்
(A).சதி மற்றும் உடன்கட்டை ஏறுதல் பெண்சிசு கொலை ஆகியவற்றினை ஆங்கில அரசு தண்டனைக்குறிய குற்றமாக அறிவித்தது. .விதவைகள் மறுமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது பழமைவாதிகளினை பீதியடைய செய்தது
(B).இந்துக்களின் சொத்துரிமை சட்டம் மாற்றியமைக்க்கப்பட்டது கிஸ்துவர்களாக மதம் மாறியவர்களுக்கும் மூததையர் சொத்தில் பங்குண்டு என அச்சட்டம் கூறியது (C).கோயில்களுக்கும் மசூதிக்கும் சொந்தமான நிலங்களுக்கு வரி விதிப்பு மக்களின் சமய உரிமையினை பாதித்தது
(D). இவையனைத்தும்

16).----------------------படைப்பிரிவினை சேர்ந்த இந்திய சிப்பாய் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாவினை தொடமறுத்து தனது மேலதிகாரியினை சுட்டுக்கொன்றார்
(A).பராக்பூர் (B). பூனே (C).மீராட்D). டெல்லி

17).சிப்பாய்புரட்சி முதன்முதலில் தொடங்கிய இடம்
(A).பராக்பூர் (B). பூனே (C).மீராட்D). டெல்லி

18).சிப்பாய்புரட்சி தொடங்கிய நாள்
(A).மார்ச் 29 (B). மே 10 (C).ஆகஸ்ட் 15D). செப்டம்பர் 14

19).--------------------------படைப்பிரிவினர் வெளிப்படையாக புரட்சியில் ஈடுப்பட்டனர்
(A).பராக்பூர் (B). பூனே (C).மீராட்D). டெல்லி

20).சிறைச்சாலைகளினை தகர்த்து சிறைவைக்கப்பட்டிருந்த சிப்பாய்களினை விடுவித்து டெல்லியினை நோக்கி முன்னேறியப்படை வீரர்கள்----------------------படைப்பிரிவினை சேர்ந்தவர்கள்
(A).பராக்பூர் (B). பூனே (C).மீராட்D). டெல்லி

21).பராக்பூர் படைப்பிரிவு கலைக்கப்பட்டு---------------படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டது.
(A).வங்காள (B). பூனே (C).மீராட்D). டெல்லி

22).சிப்பாய்க்கலக நிகழ்வுகளில் தவறான ஒன்று
(A).சிப்பாய்கள் டெல்லியினை கைப்பற்றி  தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்
(B).மீராட்டினை தொடர்ந்து ஆக்ரா,ஜான்சி,பனாரஸ்,மத்திய இந்தியா,பண்டேல்கண்டு போன்ற பகுதிகளிலும் புரட்சி பரவியது.
(C).ஜான்சிராணி ,தந்தியதோப்,பேஹம் ஹஸ்ரத் மஹால்,கன்வர்சிங் ஆகியோர் பல்வேறு இடங்களில் தலைமை தாங்கினர்
(D).புரட்சியானது ஆரம்பத்திலேயெ அடக்கப்படாமல் குற்றவாளிகளினை தண்டிக்காமல் வீட்டது புரட்சி பரவ முக்கிய காரணம்

  

23).பொருத்துக
(அ).கான்பூர்        -(1).ஜான்சிரானி
(ஆ).லக்னோ        -(2).கன்வார்சிங்க்
(இ).மத்திய இந்தியா –(3).நானசாகிப்
(ஈ).பிஹார்          -(4).பேகம் ஹஸ்ரத் மஹால்
(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4
(B).அ-2,ஆ-4,இ-3,ஈ-1
(C).அ-3,ஆ-4,இ-1,ஈ-2
(D).அ-3,ஆ-4,இ-2,ஈ-1
24).டெல்லியில் அரசராக பிரகடனப்படுத்தப்பட்ட முகலாய மன்னர்
(A).இரண்டாம் பகதூர்ஷா (B). மூன்றாம் பகதூர் ஷா (C).இரண்டாம் அக்பர்(D). சலிமுல்லாக்கான்
25).மராத்திய பேஷவா இரண்டாம் பாஜிராவின் தத்து மகன்
(A). நானாசாகிப் (B). தந்தியாதோபே (C).கன்வார் சிங்க்(D). இவர்களில் யாருமில்லை
26).சிப்பாய் கலகத்தில் கான்பூரில் தன்னை பீஷ்வாவாக அறிவித்தவர்
(A). நானாசாகிப் (B). தந்தியாதோபே (C).கன்வார் சிங்க்(D). இவர்களில் யாருமில்லை
  
27).பொருத்துக
(அ).கான்பூர்        -(1). நானசாகிப்
(ஆ).லக்னோ        -(2).அமர்சிங்க்
(இ).மத்திய இந்தியா –(3).சரென்றி லாரன்ஸ்,கர்னல் நில்
(ஈ).பிஹார்          -(4).சர் கர்லின் காம்பல்
(A).அ-1,ஆ-4,இ-3,ஈ-2
(B).அ-2,ஆ-4,இ-3,ஈ-1
(C).அ-2,ஆ-4,இ-1,ஈ-3
(D).அ-4,ஆ-3,1-2,ஈ-2

28)------------------------தலைமையிலான படை டெல்லியினை கைப்பற்றியது
(A).சர் ஆர்ஸ்டேல் (B).  நிக்கல்சன் (C).சர் ஜான் லாரன்ஸ்(D). இவர்கல் அனைவரும்

29).ஜானி ராணி லட்சுமி பாய்--------------------கைப்பற்றினார்
(A).மீராட்டினை (B). குவாலியரினை (C).லாகூர்(D). டெல்லி

30).தந்தியா தோபே பற்றிய கூற்றுகளினை ஆரய்ந்து தவரான ஒன்றினை தேர்வு செய்
(A).நானசாகிப்பின் படைத்தளபதி (B). ஜான்சிரானியுடன் இணைந்து ஆங்கிலேயரினை எதிர்த்தார்
(C).நானாசாகிப் கொல்லப்பட்டவுடன் நேபாளத்திற்க்கு தப்பி சென்றார் 
(D). ஜான்சி ராணி கொல்லப்பட்டவுடன் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்

31).சிப்பாய் புரட்சி ஆரப்பித்த ஆண்டு மற்றும் மாதம்
(A).1857    மார்ச் (B).1857  மே (C).1857   நவம்பர் (D).  1858 மார்ச்

32).மீராட்டில் புரட்ட்சி வெடித்த ஆண்டு மற்றும் மாதம்
(A).1857    மார்ச் (B).1857  மே (C).1857   நவம்பர் (D).  1858 மார்ச்

33).புரட்சி செய்ய திட்டமிடப்பட்டிருந்த நாள்
(A).1857    மார்ச் 29 (B).1857  மே 31 (C).1857   நவம்பர் 15 (D).  1858 மார்ச் 14


34).பொருத்துக
(அ).கான்பூர்                        - (1).1857 மே 31
(ஆ).லக்னோ                       - (2).1858 ஜூன்
(இ).மத்திய இந்தியா                - (3).1858 மார்ச்
(ஈ).புரட்சி திட்டமிடப்பட்ட நாள்      - (4).1857 நவம்பர்
(A).அ-1,ஆ-4,இ-3,ஈ-2
(B).அ-2,ஆ-4,இ-3,ஈ-1
(C).அ-2,ஆ-4,இ-1,ஈ-3
(D).அ-4,ஆ-3,இ-2,ஈ-1

35).புரட்சியின் னீர் வாக மற்றும் இராணுவ விளைவுகளில் சரியான கூற்றினை தேர்வு செய்
(A).கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது இங்கிலாந்து அரசியாரின் ஆட்சிக்கு கீழ் இந்தியா வந்தது
(B).இந்தியாவிலிருந்து இயக்குனர் குழுவும் கட்டுப்பாட்டு குழுவும் கலைக்கப்பட்டு அதற்க்குபதில் இந்திய செயளாரும் அவருக்கு உதவிட 15 உறுப்பினர் கொண்ட  குழுவும் அமைக்கப்பட்டு.இந்தியாவிற்கான தலைமை ஆளுநர் அரசு பிரதி நிதி அல்லது வைசிராய் என அழைக்கப்பட்டார்
(C).ஆங்கிலேயர் பிரங்கிப்படையினை தங்கள்வசம் வைத்து கொண்டு இராணுவத்திலிருந்த இந்தியரின் எண்ணிக்கையினை குறைத்தனர்.
 (D).  இவையனைத்தும்

36).விக்ட்டோரியப்பேரரசியின் அறிக்கை பற்றிய தவராண குறிப்பு
(A).விக்ட்டோரிய பேரரசின் பேரரிக்கை இந்திய மக்களின் மகாசாசனம்(உரிமை) என அழைக்க்கப்படுகின்றது
(B).விக்ட்டோரியப்பேரரசியின் அறிகையினை கானிங்க் பிரபு 1858 ல் அலகாப்த்தில் வாசித்தார் (C).கடும் ஆங்கிலேயரின் மரணத்திற்க்கு காரணமான குற்ற செயல்களில் ஈடுப்பட்டவர்களினை தவிர அனைவரும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்
(D). அங்கிலேய வணிகர்கள் மேற்கொண்ட அனைத்து வியாபார ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட்டன

37).குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டிய வரி
(A). நில வரி (B).சுங்க வரி (C)வருமான வரி (D).  சேவை வரி

38).குத்தகை நிலங்களினை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிரபு
(A).பெண்டிங் பிரபு (B). லின்லித்கோ பிரபு (C).டல்ஹேளசி (D). மவுண்ட் பேட்டன்

39).தென் நாட்டில் பாளையங்கள் ------------------------ஆட்சியில் உருவாயினா
(A).விஜய நகர பேரரசு (B). திருவனந்தபுரம் (C).அற்காடு நவாப்(D). பிற்கால முவ்வேந்தர்கள்

40).பாளையக்காரர்களில் மேற்க்கு பிரிவினர்
(A).பல்லவர் (B). மறவர் (C).தெலுங்கு பாளையக்காரர்கள் (D) இவற்றில் ஏதுவுமில்லை

.41).பாளையக்காரர்களில் தெற்கு பிரிவினர்
(A).பல்லவர் (B). மறவர் (C).தெலுங்கு பாளையக்காரர்கள் (D) இவற்றில் ஏதுவுமில்லை

42).பூலித்தேவன்---------------------பகுதியின் பாளையக்காரார்
(A).மதுரை (B). தஞ்சை (C). நெல்கட்டும் செவ்வல் பாளையம் (D) இவற்றில் ஏதுவுமில்லை

43).பாளையக்காரர்களில் மறவர் பிரிவுக்கு தலைவர்
(A).எட்டப்பன் (B). விஜய ரங்க சொக்க நாதர் (C).விரபாண்டிய கட்டபொம்மன் (D).புலித்தேவன்

44).பாளையக்காரர்களில் தெற்கு பிரிவுக்கு தலைவர்
(A).எட்டப்பன் (B). விஜய ரங்க சொக்க நாதர் (C).விரபாண்டிய கட்டபொம்மன் (D) இவற்றில் ஏதுவுமில்லை

45).முதன் முதலில் ஆங்கிலேயரினை எதிர்த்த பாளையக்காரர்
(A).எட்டப்பன் (B). விஜய ரங்க சொக்க நாதர் (C).விரபாண்டிய கட்டபொம்மன் (D) புலித்தேவன்

46).பூலித்தேவன்---------------------------இருந்து மதுரையினை கைப்பற்றினார்.
(A).மாப்பாஸ்கான் (B). கர்னல் காம்பெல் (C).யுசுப்கான் கான்சாகிப் (D) கர்னர் ஹெரன்

47).பூல்லித்தேவரை பிடிப்பதற்காக பிரிட்டிஸ் அரசினால் நியமிக்கப்பட்ட தளபதி
(A).மாப்பாஸ்கான் (B). கர்னல் காம்பெல் (C).யுசுப்கான் கான்சாகிப் (D) கர்னர் ஹெரன்

48).மாப்பாஸ்க்கான்---------------------உதவியோடு -மேற்க்கு பாளையக்காரர்களினை எதிர்த்து போரிட்டார்.
(A).கர்னர்ல் பெல் (B). கர்னல் காம்பெல் (C).யுசுப்கான் கான்சாகிப் (D) கர்னர் ஹெரன்

49).பூலித்தேவன் கைப்பற்றிய மதுரையினை மீட்டவர்---------------------
(A).மாப்பாஸ்கான் (B). கர்னல் காம்பெல் (C).யுசுப்கான் கான்சாகிப் (D) கர்னர் ஹெரன்

50).பூலித்தேவன்--------------------உதவி கோரினார்
(A).திப்புசுல்த்தான் (B). ஹைதர் அலி (C).யுசுப்கான் கான்சாகிப் (D) திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்

51).நெல்கட்டும் செவ்வலினை கைப்பற்றியவர்
(A).மாப்பாஸ்கான் (B). கர்னல் காம்பெல் (C).யுசுப்கான் கான்சாகிப் (D) கர்னர் ஹெரன்

52).நெல்கட்டும் செவல்---------ஆண்டு கைஅப்பற்றப்பட்டது
(A).1758 (B). 1767 (C).1765 (D) 1766

53).தமிழகத்தில் ஆங்கிலேயரினை முதன் முதலில் ஆயுதம் தாங்கி எதிர்த்த பெருமைகுறியவர்
(A).விரபாண்டிய கட்டபொம்மன் (B). கவேலு நாச்சியார் (C).மருது சகோதரர்கள் (D) .புலித்தேவன்

54).ஆங்கிலேயருக்கு பூலித்தேவனை எதிர்க்க்க்க உதவியவர்கள்
(A).கிழக்கு பகுதி பாளையக்காரர்கள் (B).  (C).யுசுப்கான் கான்சாகிப் (D) கர்னர் ஹெரன்

55)பாஞ்சாலங்க்குறிச்சியின் பாளையகாரர்
(A).விரபாண்டிய கட்டபொம்மன் (B). கவேலு நாச்சியார் (C).மருது சகோதரர்கள் (D) .புலித்தேவன்

56).கட்டபொம்மனின் தந்தை
(A).ஜெகவீர பண்டியேர் (B). கெஜவிரபொம்மன் (C).விர ஜக்கையப்பாண்டியன் (D) .புலித்தேவன்

57).கட்டமொம்மனை மற்றும் அவரின் மமைச்சர் சிவதானுப்ப்பிள்ளையினையும் மூன்று மனி நேரம்  நிற்கவைத்து விளக்கம்  விளக்கம் கேட்டவர்
(A).கலக்டர் ஜாக்சன் துரை (B). மேஜர் பானர் மேன் (C).மருது சகோதரர்கள் (D) .புலித்தேவன்

58).பாஞ்சாலங்க்குறிச்சியின் மீது படையேடுத்த ஆங்கிலேய படைத்தளபதி
(A).விரபாண்டிய கட்டபொம்மன் (B). கவேலு நாச்சியார் (C).மருது சகோதரர்கள் (D) .புலித்தேவன்

59).கட்ட்பொம்மன் ஜாக்சன் துரையியனை சந்தித்த இடம்
(A).ஸ்ரீவில்லிபுத்தூர் (B). திருச்சிராப்பள்ளி (C).சிவகங்கை (D) இராமநாதபுரம்

60).கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
(A).கயத்தாறு (B). திருத்து (C).சிவகங்கை (D) துள்ளம்

61)பொருத்துக
(அ).மருது பண்டியர்         - (1).திண்டுக்கள்
(ஆ).கோபால நாயக்கர்       - (2)..மைசூர்
(இ).கேரள வர்மா           - (3).சிவகங்கை
(ஈ).கிருஷ்ணப்ப  நாயக்கர்ப் – (4).மலபார்
(A).அ-1,ஆ-2,இ-3ஈ-4
(B).அ-3,ஆ-1,இ-4ஈ-2
(C).அ-1,ஆ-3,இ-2ஈ-4
(D).அ-4,ஆ-3,இ-2ஈ-1

62).வேலூர் சிப்பய் கலகத்தினை அடக்கியவர்
(A).கர்னல் கில்லெஸ்ப்பி (B). தமேஜர் கூட்ஸ் (C).தளபதி சர் ஜான் கிரடாக் (D) கர்னல் போர்பெர்ஸ்

63).வேலுர் சிப்பய் கலகம்-----------------நடைபெற்றது
(A).1857 (B). 1807 (C).1806 (D) 1805

64).வேலுர் சிப்பாய் கலத்தில் வீரர்களினால் சுல்த்தானாக அறிவிக்கப்பட்டவர்
(A).முஸ்தபா பெக் (B).பதேக் ஹைதர் (C).முகமது மாலிக் (D) மொய்சுதீன்

65).வேலுர் சிப்பாய் கலகம் நடைபெற்ற பொழுது சென்னை மாகாண ஆளுநர்
(A).வில்லியம் பெண்டிக் (B). கர்னல் ஜோசப் (C).பானர் மேன் (D) இர்வின் பிரபு

66).வேலுர் கோட்டையின் இராணுவத்தளபதி
(A).கர்னல் கில்லெஸ்ப்பி (B). தமேஜர் கூட்ஸ் (C).தளபதி சர் ஜான் கிரடாக் (D) கர்னல் போர்பெர்ஸ்

67).வேலூர் சிப்பாய் கலகத்தில் பலியான ஆங்கில அதிகாரிகள்
(A).கர்னல் பாங்கோட் (B). கர்னல் மீ கேரஸ் (C).மேஜர் ஆம்ஸ்ட்ராங்க்(D) இவர்கள் அனைவரும்

68).வேலூர் கலத்திற்கான முக்கிய காரணம்
(A).வாரிசு இழப்பு கொள்கை (B). கப்பம் வர் அதிகமாக வசூலித்தனர்
(C).தளபதி சர் ஜான் கிரடாக்  அறிமுகப்படுத்திய புதிய விதிமுறைகள் கட்டுப்படுகள் சீருடைகள்
(D).பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளாதார சுரண்டல்

69).வேலூர் சிப்பாய் கலகத்தின் விளைவுகள்
(A).சென்னை மாகண தளபதியும் கவர்னரும் திருமப அழைக்கப்பட்டனர்
(B). பதேக் ஹைதர் கலகத்தாவிற்க்கு அனுப்பப்பட்டார் (C).600 வீரர்கல்ஸ் சிறபிடிக்க்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர் (D) இவையனைத்தும்

70).வேலூர் சிப்பாய் கலகம்
(A).1857 முதல் இந்திய சுதந்திரப்போருக்கு முன்னோடி-சவார்க்கர் மற்றும்  கே.கே.பிள்ளை
(B). இந்திய விடுதலை போருக்கு தமிழேர்களே முன்னோடிகள்-என்- சஞ்சீவி

(C). காலணியாதிக்கத்தினை எதிர்த்த மருது சகோதர்களின் போராட்ட தொடர்ச்சியே இக்கலகம்-கே.ராச்சையன்  (D) இவையனைத்தும் சரி
71).வேலூர் சிப்பாய் கலகத்தீன்  நிணைவாக அரசு அஞ்சசல்த்தலை வெளியிட்ட ஆண்டு
(A)2006(B)1996(C)1986(D)1976